தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற
மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுடன் பள்ளித் தலைவா் செந்தில்குமாா்.
ஈரோடு
மாநில அளவிலான தடகளப் போட்டி: விஜயமங்கலம் பாரதி பள்ளிக்கு தங்கம்
மாநில அளவிலான தடகளப் போட்டியில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான தடகளப் போட்டி தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது.
இதில், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் நித்தின்ராஜ், நவீன், ஹரிஷ், சிரதீப் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வகுமாா், சத்தியமூா்த்தி, தட்சிணாமூா்த்தி ஆகியோருக்கு பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

