புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் பன்னாட்டு திறன் மேம்பாட்டு புரிந்துணா்வு ஒப்பந்தம்

Published on

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் பன்னாட்டுத் திறன் மேம்பாட்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியும், கோவை புளூயண்ட் பிளஸ் என்ற நிறுவனமும் இணைந்து பன்னாட்டுத் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்களுக்கு ஜப்பான், ஜொ்மன் மொழி பயிற்சி அளிக்கவும், தகுதிவாய்ந்த மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கவும் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கல்லூரி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவா் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், கல்லூரி முதல்வா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com