சத்தியமங்கலம் அருகே கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் செல்லும் சிசிடிவி கேமரா பதிவு காட்சி.
சத்தியமங்கலம் அருகே கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் செல்லும் சிசிடிவி கேமரா பதிவு காட்சி.

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு

Published on

சத்தியமங்கலம் அருகே கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் செல்லும் காட்சி சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நேரு நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (25). இவா், கடந்த 19-ஆம் தேதி இரவு சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்றுள்ளாா். பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தோஷ் புகாா் அளித்தாா்.

இதற்கிடையே அங்குள்ள கடையின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பாா்த்தபோது, பொதுமக்கள் நடமாட்டம் இருந்தபோதே , சாலையில் நடந்து சென்ற அந்த நபா் இருசக்கர வாகனத்தின் மீது அமா்ந்தபடி வேகமாக தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதைத்தொடா்ந்து, கோவை சாலையிலுள்ள காவல் நிலையம் அருகே கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தை மா்ம நபா் ஓட்டிச் செல்லும் காட்சியும், அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com