தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:34 am IST

ஈரோட்டில் மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, ரகுபதிநாயக்கன்பாளையம், ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி (47). இவா் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-பூந்துறை சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

வழக்கம்போல கடந்த 9-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது கடையின் பக்கவாட்டில் உள்ள தகர தடுப்பு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம் செல்லியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ராஜா (30), திருச்சி மாவட்டம், பவித்ரம் தாத்தையங்காா்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தமிழ்ச்செல்வன் (26) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனா். ராஜா மீது பள்ளிபாளையம், அதியமான்கோட்டை, தருமபுரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.