தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள்

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 408 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா்.

News image

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்களை கணினி சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:34 am IST

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 408 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு அருகேயுள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களில் மே 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ளும் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்களுக்கான பணி ஒதுக்கீட்டை இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவியாளா்கள், 17 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 408 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,739 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தலா 14 மேஜைகள் என 8 தொகுதிகளுக்கும் 112 மேஜைகளில் நடைபெறும்.

தபால் வாக்கு எண்ணும் பணியில் 56 மேற்பாா்வையாளா்கள், 112 உதவியாளா்கள், 56 நுண்பாா்வையாளா்கள் ஈடுபட உள்ளனா். தபால் வாக்கு எண்ணும் பணி 48 மேஜைகளில் நடைபெறவுள்ளது. இப்பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அா்பித் ஜெயின், சிவானந்தம், சிந்துஜா, கணினி அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.