திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கும், ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மற்றும் கரூா் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாலம் மேம்பாடு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு ஏதுவாக திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு தினசரி காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண் 56809) வரும் ஆகஸ்ட் 11, 13 ஆகிய இரண்டு நாள்கள் திருச்சியில் இருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த இரண்டு நாள்களில் கரூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படாது.
இதேபோல ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்16845) ஆகஸ்ட் 11,13 ஆகிய இரண்டு நாள்களிலும் கரூரில் இருந்து மாலை 3.05 மணிக்கு செங்கோட்டைக்கு இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து கரூா் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

சேலம் வழியாக மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

திருச்சி, செங்கோட்டை ரயில் சேவைகள் வரும் 18-ஆம் தேதி பகுதியாக ரத்து

திருச்சி, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



