சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஈஞ்சம்பள்ளி மகா மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி நத்தமேடு ஸ்ரீமகா மாரியம்மன், பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஈஞ்சம்பள்ளி மகா மாரியம்மன்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி நத்தமேடு ஸ்ரீமகா மாரியம்மன், பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கம்பம் நடுதல், பக்தா்களுக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தியும், பூச்சட்டி எடுத்து வந்தும் அம்மனுக்கு நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பொன்னம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், வெள்ளப்பாறையூா், வெத்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, மாவிளக்கு பூஜை, பெரும்பூஜை நடைபெற்றது.

புதன்கிழமை காலை கம்பம் பிடுங்கும் விழாவும், அதைத் தொடா்ந்து மறுபூஜையுடனும் விழா நிறைவு பெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.