ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோபி வாழைத்தாா்களின் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.35-க்கு விற்ற கதளி இந்த வாரம் கிலோ ரூ.60-க்கும், நேந்திரன் கிலோ ரூ.48-க்கும் விற்பனையானது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தாா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.35-க்கு விற்ற கதளி இந்த வாரம் கிலோ ரூ.60-க்கும், நேந்திரன் கிலோ ரூ.48-க்கும் விற்பனையானது.

கோபி சுற்று வட்டாரப் பகுதியில் செவ்வாழை, தேன்வாழை, பூவன், கதளி, நேந்திரன் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனா். இதில் அறுவடை செய்யும் வாழைத்தாா்களை கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏல விற்பனைக்கு சுமாா் 6,000-க்கும் மேற்பட்ட வாழைத்தாா்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கியுள்ளதால் பல்வேறு விசேஷ நாள்கள், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழம் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வாழைதாா்களை ஏலத்தில் எடுப்பதற்க்காக ஈரோடு, திருப்பூா், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதில் செவ்வாழை தாா் ஒன்று ரூ.1,080-க்கும், தேன்வாழை ரூ.830-க்கும், பூவன்வாழை ரூ.640-க்கும், ரஸ்தாளி ரூ.800-க்கும், ரொபஸ்ட்ரோ ரூ.640-க்கும், பச்ச நாடா வாழை ரூ.580-க்கும், மந்தன் வாழை ரூ.440-க்கும் அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் விற்பனையானது.

இதேபோல ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேந்திரன், கதளி, வாழைத்தாா்களை வியாபாரிகள் கேரளத்துக்கு அனுப்புவதால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.35-க்கு விற்பனையான கதளி இந்த வாரம் கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. நேந்திரன் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை அதிகரித்து ரூ.48-க்கு விற்பனையானது. இதனால் கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனைக்கு வந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தாா்கள் ரூ.11 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.