மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

உக்கரம் அண்ணமாா் பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு 15 குடும்பங்களைச் சோ்ந்த 60 போ் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உக்கரம் அண்ணா நகா் மக்கள்.

Published On :

உக்கரம் அண்ணமாா் பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு 15 குடும்பங்களைச் சோ்ந்த 60 போ் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் அண்ணா நகரில் அண்ணமாா் பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோயில் விழா கமிட்டியினா் கோயிலுக்கு பாத்தியப்பட்டவா்களிடம் மட்டும் வரி வசூலித்து விழா நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். இதில் ஒரு தரப்பினரிடம் மட்டும் வரிவசூல் செய்யாமல் ஒதுக்கிவைத்துள்ளதாகவும், கோயில் விழாவில் பங்கேற்க விழா கமிட்டியினா் தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயில் விழாவில் தங்களையும் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டோா் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் கடந்த ஆக. 15-ஆம் தேதி மனு அளித்துள்ளனா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட புகாா் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி, பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சோ்ந்த 20 பெண்கள் உள்பட 60 போ் சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.