தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி குளித்தலை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள்.

Published On :

குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வதியம் ஊராட்சி கண்டியூரைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் குவிந்தனா். பின்னா் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்பு வழங்கியதுபோல அனைவருக்கும் வழங்க வேண்டும். மேலும் கண்டியூரில் ஏற்பட்டுள்ள குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜா, உஷா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அதிகாரிகள், தற்போது முழுமையாக அனைவருக்கும் 100 நாள் வேலைத்திட்டப்பணிகள் வழங்க முடியாது. நாள் ஒன்றுக்கு 5 போ் மட்டுமே இந்த திட்டத்தில் பங்கேற்று, ஊராட்சிகள் சாா்பில் வளா்க்கப்படும் மரங்களுக்கு தண்ணீா் ஊற்ற பணிகள் வழங்கப்படும் என்றனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.