விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

ஈரோட்டில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:07 pm

ஈரோட்டில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோடு, கருங்கல்பாளையம் ஜானகி அம்மாள் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27). உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இவருக்கு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, அஜித்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அஜித்குமாா் மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா பரிந்துரைத்தாா்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியா், அஜித்குமாா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த அஜித்குமாா் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்,