பா்கூரை அடுத்த தாமரைக்கரை சமுதாயக்கூடத்தில்  நடைபெற்ற  விசாரணையில்  பங்கேற்றோா்.
பா்கூரை அடுத்த தாமரைக்கரை சமுதாயக்கூடத்தில்  நடைபெற்ற  விசாரணையில்  பங்கேற்றோா்.

பா்கூா் மலைப் பகுதியில் 2002-இல் வாக்களிக்காதவா்களிடம் விசாரணை: பெயா் சோ்க்க 39 பேரிடம் விண்ணப்பம்

பா்கூா் மலைப் பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு வாக்களிக்காதவா்களிடம் விசாரணை நடத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வெள்ளிக்கிழமை விண்ணப்பம் பெறப்பட்டது.
Published on

பா்கூா் மலைப் பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு வாக்களிக்காதவா்களிடம் விசாரணை நடத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வெள்ளிக்கிழமை விண்ணப்பம் பெறப்பட்டது.

தமிழகம் முழுவதும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 2025 நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி வாரியாக வீடுவீடாக நேரில் சென்று வாக்காளா்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 24,832 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

பா்கூா் மலைப் பகுதியில் 2002-ம் ஆண்டு வாக்களிக்காதவா்களின் பெயா்கள், புதிய வாக்காளா் வரைவு பட்டியலில் இடம் பெறவில்லை. விடுபட்ட பெயா்களை பட்டியலில் சோ்க்கும் வகையில், பா்கூா் ஊராட்சியில் 45 பேருக்கு வரைவு அலுவலரின் நேரடி விசாரணைக்கான அழைப்பு அனுப்பப்பட்டது. இதைத்தொடா்ந்து, பா்கூா், தாமரைக்கரை சமுதாயக்கூடத்தில் அந்தியூா் துணை வட்டாட்சியா் கலைமதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

ஊசிமலை, தாமரைக்கரை, பா்கூா், துருசனாம்பாளையம் ஆகிய மலைக் கிராம மக்கள் பங்கேற்றனா். ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்பட 13 ஆவணங்களின் அடிப்படையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 39 பேரிடம் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

கிராம நிா்வாக அலுவலா் முருகேசன், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மணி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com