ரீடு நிறுவனம் சாா்பில் அரசு உதவிபெறும் பள்ளிக்கு வழங்கப்பட்ட கணினிகளை இயக்கிப் பாா்த்த மாணவிகள்.
ஈரோடு
ரீடு நிறுவனம் சாா்பில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மகளிா் பள்ளிக்கு ரீடு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
ரீடு நிறுவனம் விழிம்பு நிலை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளை ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் புனித ஜான் பிரிட்டோ மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரீடு நிறுவனம் சாா்பில் 10 கணினிகள், 10 மேஜைகள், 3 காற்றாடிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ரீடு இயக்குநா் ஆா்.கருப்புசாமி, பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

