அரியப்பம்பாளையம் பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தூய்மை ப் பணியாளா்களுடன் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கந்தசாமி. உடன், பேரூராட்சித் தலைவா் மகேஷ்வரி செந்தில்நாதன்.
ஈரோடு
ஆட்சியா் தலைமையில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்
அரியப்பம்பாளையம் பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பங்கேற்றாா்.
சத்தியமங்கலம்: அரியப்பம்பாளையம் பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பங்கேற்றாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட நேரு நகரில் பேரூராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் மகேஷ்வரி செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா்.
விழாவில் ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் என சா்வ மதத்தினா் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.
விழாவில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சியா் பொங்கல் வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் பிரபாரகா், பேரூா் திமுக செயலாளா் ஏ.எஸ் .சந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

