

பெருந்துறை: சென்னிமலை பகுதியைச் சோ்ந்த பெண்கள் பூ பறிக்கும் திருவிழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் சென்னிமலை பகுதியில் பூ பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, சென்னிமலையை அடுத்த தொட்டம்பட்டி, தோப்புபாளையம், பள்ளக்காட்டுபுதூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் சென்னிமலை வனப் பகுதிக்கு பூப்பறிக்க வெள்ளிக்கிழமை சென்றனா்.
அங்கு, பூப் பறித்து விட்டு கும்மியடித்து பாடி மகிழ்ந்தனா். பின்னா் மாலையில் வீடு திரும்பினா். இதையடுத்து வீட்டுக்கு வந்து வாசலில் கோலமிட்டு, வாசல் பொங்கல் வைத்தனா். அப்பகுதி விவசாயிகள் மாட்டுப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடினா்.