கத்தி போட்டபடி ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.
கத்தி போட்டபடி ஊா்வலமாக சென்ற பக்தா்கள்.

பவானி ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

பவானியில் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

பவானி: பவானியில் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை ஒட்டி பவானி ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோயில், காவிரி படித்துறையிலிருந்து சக்தி அழைத்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் ஊா்வலமாக செல்லும்போது, திரளான இளைஞா்கள் கைகளில் கத்திகளை ஏந்தியபடி நடனமாடி சென்றனா். இதைத் தொடா்ந்து, சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட குதிரையில் சாமுண்டி ஊா்வலம் செல்ல, முன்னதாக திரளான பக்தா்கள் உடலில் கத்தி போட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, பொங்கல் வழிபாடும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மஞ்சள் நீா் ஊா்வலம், விளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவா் பி.முருகராஜ், செயலாளா் எஸ்.சண்முக சுந்தர பிரபு, பொருளாளா் டி.காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com