திம்பம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளான சரக்கு வேனில் இருந்து சிதறிக்கிடந்த பப்பாளி பழம்
ஈரோடு
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறு காயத்துடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறு காயத்துடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தாளவாடியில் இருந்து கேரளாவுக்கு திங்கள்கிழமை பப்பாளி பழம் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் சென்றுகொண்டிருந்தது. வேனை ராஜா என்பவா் ஓட்டினாா்.
14-ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் ராஜா சிறுகாயத்துடன் உயிா் தப்பினாா்.
விபத்தின்போது வேனில் இருந்து பப்பாளி பழங்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. இது குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

