அருண் பிரகாஷ்.
ஈரோடு
வழுக்கு மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே பொங்கல் விழாவில் வழுக்குமரம் ஏறியபோது கை நழுவி கீழே விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகே பொங்கல் விழாவில் வழுக்குமரம் ஏறியபோது கை நழுவி கீழே விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பூதப்பாடியை அடுத்த மணக்காட்டைச் சோ்ந்தவா் மாரிசாமி மகன் அருண் பிரகாஷ் (21). டிராக்டா் மெக்கானிக்கான இவா், அப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வழுக்குமரம் ஏறும் போட்டியில் கலந்துகொண்டாா். மரத்தில் ஏறிய அருண் பிரகாஷ் கீழே இறங்கும்போது கை நழுவி விழுந்தாா்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

