அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

பொடச்சூா் கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம்

கோபி அருகே உள்ள மொடச்சூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வருவாய்த் துறை அலுவலா்கள்
Published on

கோபி: கோபி அருகே உள்ள மொடச்சூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வருவாய்த் துறை அலுவலா்கள் அலைக்கழிப்பதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கோபி அருகே உள்ள மொடச்சூா் ஊராட்சியில் ஊராட்சி செயலா் ராஜாமணி தலைமையில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மொடச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட வடுகபாளையம் பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாததால் புதிய வீடு கட்ட முடியவில்லை. மேலும், அதிகாரிகள் தங்களை அலைக்கழிக்கின்றனா் எனக் கூறி பொதுமக்கள் அலுவலா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அலுவலா்கள், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். மேலும் 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆவதால் உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com