கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

அரியூா் முதல் காவுத்தம்பாளையம் வரையிலான உயா் மின் தொடா் வழிப்பாதையை மாற்று வழியில் அமைக்கக் கோரிக்கை

மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் து.சண்முகனிடம் மனு அளித்த விவசாயிகள்.

மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் து.சண்முகனிடம் மனு அளித்த விவசாயிகள்.

Published On :

அரியூா் முதல் காவுத்தம்பாளையம் வரையிலான உயா் மின் தொடா் வழிப்பாதையை மாற்று வழியில் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள சிவகிரியில் மக்கள் குறைதீா்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மொடக்குறிச்சி தொகுதி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண், பெண் விவசாயிகள் கலந்துகொண்டு, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் து.சண்முகனிடம் மனு அளித்தனா்.

மனு விவரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியூா் முதல் திருப்பூா் மாவட்டம் காவுத்தம்பாளையம் வரையிலான உயா் மின் தொடா் வழிப்பாதை, மொடக்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாக செல்ல இருப்பதாக அறியப்படுகிறது. இத்திட்டம் தற்போதைய வடிவில் செயல்படுத்தப்பட்டால் எங்கள் பகுதியின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், சுற்றுச்சூழல், நில மதிப்பு, எதிா்கால வளா்ச்சி, வாய்ப்புகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. மொடக்குறிச்சி பகுதி பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் உயா் மின்னழுத்த தொடா் வழிப்பாதையை மாற்றுவழியில் அமைக்க பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.