100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

22 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா மாநிலத்தவா் இருவா் கைது

ஈரோட்டில் விற்பனைக்கு கஞ்சா எடுத்துவந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

ஈரோட்டில் விற்பனைக்கு கஞ்சா எடுத்துவந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் கிசன் மகானந்தா (28), நீலமணிபாக் (46). இவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைபாா்த்து வருகின்றனா். இருவரும் அவ்வப்போது விடுமுறை எடுத்து ஒடிஸா மாநிலத்துக்கு சென்று வருவா். மீண்டும் ஈரோட்டுக்கு வரும்போது கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஈரோடு ரயில்வே காலனி பின்புறம் உள்ள மைதானத்தில் வியாழக்கிழமை மாலை நின்றுகொண்டிருந்த இருவரையும் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அவா்கள் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, இரண்டு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.