கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சுமாா் 150 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா்.
விருத்தாசலம் சென்னை சாலையில் உள்ள வயலூா் ரயில்வே மேம்பாலம் அருகே, போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வெள்ளை நிற சாக்கு மூட்டைகளுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் 150 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா்கள் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம், ராணிபாங்கா கிராமத்தைச் சோ்ந்த லிபியா பிரதான் (29), ஹிமேந்திர பிரதான் (24), ராமாநுமான்ஜி (33) என்பது தெரியவந்தது. மேலும், சென்னையில் இருந்து பேருந்து மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்ததுள்ளனா்.
இதையடுத்து, விருத்தாசலம் பேலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்த கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா் கைது
22 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா மாநிலத்தவா் இருவா் கைது

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



