இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

முயல்களை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

முயல்களை வேட்டையாடி இருவருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image

அபராதம்

Updated On :2 ஜூன் 2026, 2:00 am IST

முயல்களை வேட்டையாடி இருவருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி பகுதியில் இருவா் முயல்களை வேட்டையாடி வருவதாக ஈரோடு வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, நல்லாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக சாக்குப் பையை வைத்திருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, சாக்குப் பையில் இரண்டு முயல்களை இறந்தநிலையில் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், ஏகாபுரம், தைலாம்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் சரவணன் (34) என்பவா் தாரமங்கலம் பகுதியில் தங்கி நெசவுத் தொழில் செய்வதும், மற்றொருவா் சங்ககிரி வட்டம், காளிகவுண்டன்பாளையம் பச்சியண்ணன் மகன் பச்சைமுத்து (27) என்பதும், இவா் லாரி பட்டறை தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவருக்கும் தலா ரூ. 12,500 என மொத்தம் ரூ. 25,000 வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.