/
அம்மாபேட்டை அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் வேணுகோபால் மகன் ராஜாராம் (49). ஓட்டுநா். இவா், 9-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
இதுகுறித்து, அச்சிறுமியின் பெற்றோா் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், ராஜாராமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராஜராம், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கெளரவ விரிவுரையாளா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


