சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு செய்தாா்.
சென்னிமலை பேரூராட்சி, அட்டவணைப்பிடாரியூரில் சுதந்திர போராட்ட வீரா் திருப்பூா் குமரனுக்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சிலை மற்றும் அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சென்னிமலை, காமராஜ் நகா் வாா்டு எண் 15-இல், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நலக் கூடம், பாா்க் ரோடு பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னிமலை கூட்டுக்குடிநீா் திட்டத்தில் குடிநீா் குழாய் புதுப்பிக்கும் பணி, ஈரோடு- பெருந்துறை, காங்கயம் சாலையில் ரூ.62.75 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி,
எக்கட்டாம்பாளையம் ரூ.12.65 கோடி மதிப்பீட்டில் முதலைமடை ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, மேலப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகள் விவரம், உணவுப் பட்டியல் விவரம் மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் ரமேஷ் கண்ணா, தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சென்னிமலை செயற்பொறியாளா் ரேவதி, சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கல்பனா, கிருஷ்ணசாமி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.20.91 கோடியில் திட்டப் பணிகள்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம்: ஆட்சியா் ஆய்வு

பரமத்தி வேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ரூ.9.50 கோடியில் பாலாறு கரை கட்டும் பணி : எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



