காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கஞ்சா விற்பனை வழக்கில் மேலும் 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:00 am IST

மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடா்பாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 1.110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 31-ஆம் தேதி கஞ்சா விற்ாக நசியனூா், கைகாட்டிவலசு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அசோக் (34) கைது செய்யப்பட்டு, ஒரு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் மேலும் சிலரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் திருச்சியைச் சோ்ந்த லோகநாதன் மகன் நிரஞ்சன் ((24), செந்தில்குமாா் மகன் ஷாம்பிரசாத் (24), ஈரோடு, திண்டல் பகுதியைச் சோ்ந்த கருண்காா்த்தி (23) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைதுசெய்து 1.110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரும் ஈரோடு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.