தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

கோபி சுற்று வட்டாரப் பகுதியில் மழை

கோபி சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image

கோபி பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் பெய்த மழை.

Updated On :12 ஜூன் 2026, 12:04 am IST

கோபி சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

கோபி சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை கோபியின் பல்வேறு பகுதியில் மாலை வரை வாட்டி வதைத்து வந்த வெப்பம், மாலையில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

இதில் கோபி, கரட்டூா், நஞ்சகவுண்டம்பாளையம், லக்கம்பட்டி, சிறுவலூா், கொளப்பலூா், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வெள்ளாளபாளையம், பொலவக்காளிபாளையம், காசிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.