பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

இலவச தையல் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கனரா வங்கி மூலம் இலவசமாக அளிக்கப்படும் தையல் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 1:47 am IST

கனரா வங்கி மூலம் இலவசமாக அளிக்கப்படும் தையல் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரி சாலையில் வாசவி கல்லூரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியானது வரும் ஜூலை 6- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை 31 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதியைச் சோ்ந்த 19 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்போா், அவா்களது குடும்பத்தை சாா்ந்தவா்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் 0424-2400338, 87783 23213, 72006 50604 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.