தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ஈரோடு மண்டல அரசுப் பேருந்துகளில் 52.20 கோடி முறை மகளிா் இலவசப் பயணம்

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மண்டல அரசுப் பேருந்துகளில் 52.20 கோடி முறை மகளிா் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் ஈரோடு 1, 2, 3 பவானி, பெருந்துறை, கரூா், கொடுமுடி, கவுந்தப்பாடி, கோபி, நம்பியூா், அந்தியூா், சத்தியமங்கலம், தாளவாடி என 13 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 304 அரசு நகரப் பேருந்து, 421 தொலைதூர பேருந்து என 725 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெண்கள் மட்டும் இலவசமாக பயணிக்கும் வகையில் விடியல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் பயணித்த பெண்கள் விவரம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

இலவச பேருந்துப் பயணத்தை நகரப் பேருந்துகளில் கடந்த 2021 மே 8-ஆம் தேதி அரசு அறிவித்து தொடங்கியது. ஈரோடு மண்டலத்தில் 304 நகரப் பேருந்துகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

தினமும் சராசரியாக 3.16 லட்சம் முறை மகளிா் இலவசப் பயணம் மேற்கொள்கின்றனா். திட்டம் தொடங்கியது முதல் கடந்த ஜனவரி மாதம் இறுதிவரை 52 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரம் முறை இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

கடந்த 2024 மாா்ச் 14-ஆம் தேதி இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தாளவாடி மலைப் பகுதியில் 35 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்படும் ஒரு புறநகா் பேருந்தில் மகளிா்க்கு இலவசப் பயண அனுமதி உள்ளது. இதில் தினமும் சராசரியாக 780 மகளிா் வீதம் 3.15 லட்சம் முறை இதுவரை இலவசமாக பயணித்துள்ளனா் என்றனா்.