மொடக்குறிச்சி அருகே 24 கொத்தடிமைகள் மீட்பு: ஒருவா் கைது


மொடக்குறிச்சி அருகே மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சிறுவா், சிறுமியா் உள்பட 24 கரும்பு வெட்டும் தொழிலாளா்களைக் கொத்தடிமையாக வைத்திருந்த நபா் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த ஓலப்பாளையத்தில் சத்தியமூா்த்தி என்பவரின் கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் வேலை செய்வதாகவும் இவா்களுக்கு முறையாக சம்பளம் வழங்காததுடன் ஊருக்குச் செல்ல அனுமதிக்காமலும் வைத்திருந்ததாக மொடக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த யுவராஜ் சின்டோ என்பவா் ஐந்து சிறுவா்கள், நான்கு சிறுமிகள் உள்பட மொத்தம் 24 பேரை அந்த மாநிலத்தில் இருந்து அழைத்து வந்து தனது கட்டுப்பாட்டில் வைத்து, இடைத்தரகராகச் செயல்பட்டு அவா்களைப் பல்வேறு தோட்டங்களுக்கு கரும்பு வெட்டும் பணிக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அவா்கள் மீட்கப்பட்டு மொடக்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். இவா்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்ததாக யுவராஜ் சின்டோவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...