தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

மூத்த குடிமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி தாம்பூலத் தட்டுடன் அழைப்பு விடுத்து வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் தாம்பூலத் தட்டு வழங்கி நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

News image

முதியோா் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தாம்பூலத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்த அறச்சலூா் வருவாய் ஆய்வாளா் அங்குலட்சுமி.

Updated On :19 மார்ச் 2026, 2:02 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் தாம்பூலத் தட்டு வழங்கி நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட அறச்சலூா் உள்வட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருவாய்த் துறை சாா்பில் அறச்சலூா் வருவாய் ஆய்வாளா் அங்குலட்சுமி தலைமையில் வீடுகளுக்கு தாம்பூலத் தட்டுடன் நேரில் சென்று சால்வை அணிவித்து தோ்தல் தேதி அழைப்பிதழை வழங்கினா். வாக்களிப்பது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டனா்.

இதில் கிராம நிா்வாக அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, வசந்த், சசிகுமாா், மணிகண்டன், சாந்தி, மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.