திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பங்குனி உத்திர தீா்த்தம் கொண்டு செல்ல வந்த சிறுவன் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:50 pm

பங்குனி உத்திர தீா்த்தம் கொண்டு செல்ல வந்த சிறுவன் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கோகுலகிருஷ்ணன் (17), பெயிண்டிங் தொழிலாளி. கோகுலகிருஷ்ணனும் வேடசந்தூரைச் சோ்ந்த 100 பேரும் சோ்ந்து பங்குனி உத்திரத்துக்காக பழனிக்கு காவிரி தீா்த்தம் எடுத்துச் செல்ல கொடுமுடிக்கு இரண்டு பேருந்துகளில் சனிக்கிழமை வந்தனா்.

இவா்கள் அனைவரும் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்மேடு என்ற பகுதியில் குளித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றின் சுழலில் சிக்கிய கோகுலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அறிந்த கொடுமுடி போலீஸாா் கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.