நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது

ஈரோட்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:59 pm

ஈரோட்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கணேசபுரம், மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (38). திருமணமான இவா், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தறி பட்டறையில் பணியாற்றி வந்தாா். அப்போது, அதே பட்டறையில் கணவரைப் பிரிந்து இரண்டு மகள்களுடன் வசிக்கும் பெண் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளாா். அந்தப் பெண்ணுடன் சுரேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அவரது வீட்டுக்கு சுரேஷ்குமாா் அடிக்கடி சென்று வந்த நிலையில், அப்பெண்ணின் 14 வயது மகளை சுரேஷ்குமாா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

சிறுமி கா்ப்பமடைந்த நிலையில் இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவரது தாய் புகாா் அளித்தாா். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷ்குமாரைக் கைது செய்தனா்.