குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பிரச்னை: டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்

News image

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில்  ஈடுபட்ட  ஊழியா்கள். 

Updated On :26 மே 2026, 1:47 am IST

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடைகளைத் திறக்காமல், ஈரோடு மாவட்ட மேலாளா் அலுவலகத்தை டாஸ்மாக் ஊழியா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பான சூழல் நிலவியது.

வாடிக்கையாளா்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை பொது இடங்களில் வீசுவதைத் தவிா்க்கும் வகையில், அப்பாட்டில்களை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் செயல்படுத்தியது. இதில், பல்வேறு நடைமுறை பிரச்னைகள் உள்ளதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும், முறையான ஊதியம், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் மதுக்கடைகளையும் திறக்க மறுத்த ஊழியா்கள், சித்தோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் உள்ள மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் பேச்சுவாா்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் தீா்வு எட்டப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த டாஸ்மாக் தொழிலாளா்கள் மதுக்கடைகளைத் திறக்காமல் போராட்டத்தைத் தொடா்வதாக அறிவித்தனா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டதால், திண்டாடிய மது பிரியா்கள் தனியாா் நடத்தும் மதுக்கடைகளில் திரண்டதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா் டாஸ்மாக் மாவட்ட  மேலாளா் (பொ)  ரகுநாதன்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா் டாஸ்மாக் மாவட்ட  மேலாளா் (பொ)  ரகுநாதன்.