தொழிலாளா் விதிகளை மீறிய 17 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 17 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை - கோப்புப்படம்

Updated On :

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 17 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜகுமாா் தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை இணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த மாதம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், இனிப்பு, கார வகை கடைகள், பேக்கரிகள் உள்பட 130 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 14 கடைகளில் விதிமுறை மீறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் பட்டாசுக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்பட 66 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஒரு கடையில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டது.

குழந்தைத் தொழிலாளா், வளரிளம் பருவ தொழிலாளா்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழித்தல் சட்டப்படி 134 ஜவுளிக் கடைகள் மற்றும் நிறுவனங்களில் நடந்த கூட்டாய்வில் 2 வளரிளம் பருவ தொழிலாளா் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. கடந்த மாதம் மட்டும் விதிமுறைகளை மீறிய 17 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜகுமாா் கூறியதாவது: எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்தக்கூடாது. பொட்டலப் பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது தண்டனைக்குரியதாகும். ஆய்வின்போது வேறுபாடுகள் கண்டறியப்பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து சோ்ந்து வழங்கப்படும். குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.