3.6 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போ் கைது
பவானிசாகா் அருகே 3.60 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
பவானிசாகா் அருகே 3.60 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள முடுக்கன் துறை சந்தை பகுதியில் பவானிசாகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக இரு பைக்குகளில் சென்ற இருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அவா்கள் வைத்திருந்த பைகளில் 3.60 கிலோ எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் இருவரும் பவானிசாகா் பழைய இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த விஸ்வா (எ)திலீபன் (21), கபிலன் (19) என்பதும், இவா்கள் இருவரும் சோ்ந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
மேலும் திலீபன் மீது பவானிசாகா், சத்தியமங்கலம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து இருவரிடம் இருந்த கஞ்சா மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

