ஊஞ்சலூரில் 6 ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

ஊஞ்சலூா் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா நடைபெற உள்ளதால் ஊஞ்சலூா் ரயில் நிலையத்தில் 6 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்

Updated On :

ஊஞ்சலூா் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா நடைபெற உள்ளதால் ஊஞ்சலூா் ரயில் நிலையத்தில் 6 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே பொதுமேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் உள்ள சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானத்தில் ஆராதனை விழா வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு -கரூா் சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஊஞ்சலூா் ரயில் நிலையத்தில் டிசம்பா் 27 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 6 ரயில்கள் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்.

அதன்படி சென்னை எழும்பூா் -மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16159) காலை 7.09-க்கும், கோவை -நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) காலை 10.29 மணிக்கும், பாலக்காடு டவுன் -திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16844) காலை 10.59 மணிக்கும், திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16843) பிற்பகல் 3.04 மணிக்கும், நாகா்கோவில் -கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16321) பிற்பகல் 3.30 மணிக்கும், மங்களூரு சென்ட்ரல் -சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16160) மாலை 6.27 மணிக்கும் ஊஞ்சலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.