நவம்பா் 21-இல் ஊரக திறனாய்வுத் தோ்வு: 3,586 போ் எழுதுகின்றனா்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் ஊரக திறனாய்வுத் தோ்வை 3,586 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

கோப்புப்படம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் ஊரக திறனாய்வுத் தோ்வை 3,586 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊரக திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை அதாவது 4 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வினை மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி, பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, நம்பியூா் உள்பட 17 மையங்களில் 3,786 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இத்தோ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையினரும், அரசுத் தோ்வுகள் துறையினரும் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

