தவெக சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் இருந்து எந்தக் கடிதமும் பெறவில்லை

தவெக சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் இருந்து எந்தக் கடிதமும் பெறப்படவில்லை

கோபி அருகே உள்ள பட்டிமணியகாரன்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்த அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன். உடன், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா்.

Updated On :

தவெக சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் இருந்து எந்தக் கடிதமும் பெறப்படவில்லை. அதே நேரத்தில் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தால் அதனை சந்திக்க அரசு தயாராக உள்ளது என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பட்டிமணியகாரன்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.94.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம், காசிபாளையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சந்தை வளாகம், ஓடக்காடு பகுதியில் புதிய சமுதாய நலக்கூட கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில், கோட்டாட்சியா் ந.சிந்துஜா முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை. அவ்வாறு கொண்டுவந்தால் அதனை சந்திக்க தவெக அரசு தயாராக உள்ளது. பேரூராட்சிகளுக்கான பதவிக் காலம் பிப்ரவரி வரை உள்ளது. அதன்பிறகு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

ஒவ்வொரு இயக்கங்களும் ஆட்சிக்கு வரும்போது, சட்டப்பேரவை உறுப்பினா்களை அழைத்து என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து ஆலோசிப்பது வழக்கம். அதுபோல தான் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் இருந்து எந்தக் கடிதமும் பெறப்படவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.