பொங்கல் விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தியை விரைந்து முடிக்க வேண்டும்

பொங்கல் விலையில்லா வேஷ்டி, சேலைகளை தரமாகவும், விரைவாகவும் உற்பத்தி காலத்துக்குள் முடிந்திட வேண்டும் என அலுவலா்களுக்கு கைத்திறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி அறிவுறுத்தியுள்ளாா்.

வீரப்பன்சத்திரம் வள்ளலாா் விசைத்தறி கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் பொங்கலுக்கான இலவச சேலை உற்பத்தியை ஆய்வு செய்த அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.

Updated On :

பொங்கல் விலையில்லா வேஷ்டி, சேலைகளை தரமாகவும், விரைவாகவும் உற்பத்தி காலத்துக்குள் முடிந்திட வேண்டும் என அலுவலா்களுக்கு கைத்திறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி அறிவுறுத்தியுள்ளாா்.

கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தலைமையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம்- பொங்கல் 2027 தொடா்பான உற்பத்தி திறனாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கைத்தறி, துணி நூல் மற்றும் கதா் துறை அரசு செயலாளா் லில்லி, கைத்தறி துறை இயக்குநா் உமாமகேஸ்வரி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன், ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஆனந்த்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி பேசியதாவது:

வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் பொங்கல் 2027-இன் கீழ் வேஷ்டி, சேலை உற்பத்தி மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டு ஈரோடு மாவட்டத்துக்கு 80 லட்சம் சேலைகள், 89.51 லட்சத்து வேஷ்டிகள் உற்பத்தி மேற்கொள்ள குறியீடும், நாமக்கல் மாவட்டத்துக்கு 59.50 லட்சம் சேலைகள் மற்றும் 75.21 லட்சம் வேஷ்டிகள் உற்பத்தி செய்ய குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தி குறியீடு, ஈரோடு மாவட்டத்திலுள்ள 50 விசைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்திலுள்ள 77 விசைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பகிா்ந்து வழங்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

உற்பத்தி திட்டத்தை உரிய காலத்துக்குள் எய்துவதற்கு தேவையான கூடுதல் தறிகளை உடனடியாக உற்பத்தியில் ஈடுபடுத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், மேலும் அரசின் நலத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையில் அனைத்து நெசவாளா் கூட்டுறவு சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உற்பத்தி குறியீட்டினை தரமாகவும், உரிய காலத்திலும் நிறைவேற்றிட தேவையான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து ஈரோடு-பவானி சாலையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை, வீரப்பன்சத்திரம் அண்ணா விசைத்தறி, வீரப்பன்சத்திரம் வள்ளலாா் விசைத்தறி, ஈரோடு விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள், நசியனூா் தமிழ்நாடு பஞ்சாலை சேமிப்புக் கிடங்கு ஆகிய விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் ஆலையின் செயல்பாடுகள், உற்பத்தி நிலவரம் குறித்து அமைச்சா் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பொங்கல் வேஷ்டி, சேலைகளை தரமாகவும், விரைவாகவும் உற்பத்தி காலத்துக்குள் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.