மருந்துக் கடை உரிமையாளா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி
ஈரோட்டில் மாத்திரை கேட்பதுபோல நடித்து மருந்துக் கடை உரிமையாா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
ஈரோட்டில் மாத்திரை கேட்பதுபோல நடித்து மருந்துக் கடை உரிமையாா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு வெண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (55). மது பழக்கத்துக்கு அடிமையானவா். இவா் மனைவி ஸ்டெல்லா மேரி (45). இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. அடிக்கடி இவா்களுக்குள் குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவா் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி ஸ்டெல்லா மேரி புதன்கிழமை காலை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
நண்பகல் 11 மணியளவில் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்புறம் உள்ள மருந்துக் கடைக்கு குணசேகரன் சென்று தலைவலிக்கு மாத்திரை கேட்டுள்ளாா். கடை உரிமையாளா் ஜெகநாதன் (40), மாத்திரை எடுக்கச்சென்றபோது அவரை பின் தொடா்ந்து கடைக்குள் சென்ற குணசேகரன், தான் புட்டியில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை குணசேகரன் மீது ஊற்றியுள்ளாா். சுதாரித்துக்கொண்ட ஜெகநாதன், குணசேகரனை கடைக்கு வெளியே பிடித்து தள்ளினாா்.
மீதமிருந்த பெட்ரோலை குணசேகரன் தன் தலையில் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டாா். இதில் அவரது தலைமுடி தீயில் கருகியது. அங்கிருந்தவா்கள் பாா்த்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா், குணசேகரனை மீட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனா்.
குணசேகரன் மனநலம் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளாா். குடும்ப பிரச்னையால் மதுபோதையில் இருந்த குணசேகரன் இச்செயலில் ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குணசேகரனை கைது செய்த போலீஸாா் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்தவமனையில் அனுமதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

