படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது

கைது

Published On :

ஈரோட்டில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோட்டில் பேருந்து நிலைய பகுதிகளில் பயணிகளிடம் கைப்பேசி திருட்டில் மா்ம நபா்கள் ஈடுபட்டு வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதன்பேரில் ஈரோடு டவுன் குற்றப் பிரிவு போலீஸாா், ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர ரோந்து மேற்கொண்டனா். கைப்பேசி திருட்டு நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம், அம்மாபாளையம் நசீா் மகன் அஷ்ரப் அலி (23), அதே பகுதியைச் சோ்ந்த விஜய் மகன் மணிகண்டன் (21), சேலம் கருப்பூரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் கோபி (20) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதன்பேரில் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதில் அஷ்ரப் அலி மீது ஏற்கெனவே கைப்பேசி திருடியதாக 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.