மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

மொடக்குறிச்சியில் இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

மொடக்குறிச்சி அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

மொடக்குறிச்சி அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மொடக்குறிச்சி அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி. இவா் தனது வீட்டின் முன் கடந்த 2-ஆம் தேதி நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் எழுமாத்தூா் பகுதியில் மொடக்குறிச்சி காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சிவகிரியில் இருந்து வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு கோபால் மகன் விஜய் (23), ஈரோடு சூரம்பட்டி மூா்த்தி மகன் சக்கரை (எ) சரணவக்குமாா் (20) என்பதும், ஊஞ்சப்பாளையம் துரைசாமி என்பவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களை எழுமாத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.