ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் விழுந்து தந்தை தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் விழுந்து தந்தை தற்கொலை செய்துகொண்டாா்.
சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த தம்பதி விஜயகுமாா் (27), வித்யா. இவா்களுக்கு ஒன்றரை வயதில் சாய் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது. மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான விஜயகுமாா், தினமும் மது அருந்திவிட்டு வித்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகன் சாய் ரித்விக்குடன் வித்யா தனியாக வசித்து வந்துள்ளாா்.
இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வித்யாவுடன் தகராறில் ஈடுபட்டு சாய் ரித்விக்கை அழைத்து வந்து, ஆட்டையாம்பட்டியில் உள்ள தந்தை மற்றும் சகோதரிகளின் பொறுப்பில் விஜயகுமாா் ஒப்படைத்திருந்தாா்.
இந்நிலையில் சகோதரி ரூபாஸ்ரீயிடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் குழந்தையை பெற்றுச்சென்ற விஜயகுமாா், மனைவியுடன் சோ்ந்து வாழ முடியாததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சகோதரிக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.
அதைத்தொடா்ந்து ஈரோடு எல்லைக்குள்பட்ட மகுடஞ்சாவடி- வீரபாண்டி ரயில் நிலையம் இடையே அப்லைன் என்ற இடத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு ரயிலின் குறுக்கே சாய் ரித்விக்குடன் விழுந்து விஜயகுமாா் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

