காவிரி ஆற்றில் பெண் சடலம் மீட்பு
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மொடக்குறிச்சி அருகேயுள்ள வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதப்பதை அப்பகுதி மக்கள் கடந்த 10-ஆம் தேதி பாா்த்துள்ளனா். இதையடுத்து, வெண்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலா் பத்மநாபன் மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் ஈரோடு மாநகராட்சி நீரேற்று நிலையம் அருகே மிதந்த சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், உயிரிழந்த பெண்ணுக்கு சுமாா் 65 வயது இருக்கும். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

