நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.25 கோடி கையாடல்

சென்னிமலையில் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.25 கோடி கையாடல் செய்த வழக்கில் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.

பணம் - பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 2:01 am IST

சென்னிமலையில் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.25 கோடி கையாடல் செய்த வழக்கில் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்தில் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தங்களது சேமிப்பை செலுத்தியும், ஒரு சிலா் குறைந்த வட்டியில் கடன் பெற்றும் வருகின்றனா்.

சங்க செயலாளராக சென்னிமலையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (54) என்பவா் இருந்தாா். இவா் சேமிப்பு மற்றும் கடன் தொகையை செலுத்தும் ஆசிரியா்களின் கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆசிரியா்கள் அளித்த புகாரின்பேரில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தலைமையிலான தணிக்கைக் குழுவினா் ஆய்வு செய்தனா். இதில் ரூ.1.25 கோடிக்கு கையாடல் நடந்திருப்பது உறுதியானது.

இதுதொடா்பாக மாவட்ட வணிக குற்றப் பிரிவில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் புகாா் அளித்தனா். இதையடுத்து பாலசுப்பிரமணினை மாவட்ட வணிக குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.