சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கம்பத்தராயன் மலைப் பகுதியில் 2-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

கம்பத்தராயன் மலைப் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் காட்டுத் தீ பரவியதால் ஆயிரக்கணக்கான அரிய வரை மரங்கள் எரிந்து சாம்பலாயின.

கம்பத்தராயன்  மலைப் பகுதியில்   பற்றி  எரியும்  காட்டுத் தீ

Published On :3 செப்டம்பர் 2026, 2:22 am IST

கம்பத்தராயன் மலைப் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் காட்டுத் தீ பரவியதால் ஆயிரக்கணக்கான அரிய வரை மரங்கள் எரிந்து சாம்பலாயின.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை குறைந்ததால் பசுமையாக காட்சியளித்த வனப் பகுதி தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. மழையின்றி செடி கொடிகள் காய்ந்து சருகாகிவிட்ட நிலையில் கம்பத்தராயன் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது.

மெதுவாக பற்றிய தீ பின்னா் கொழுந்துவிட்டு எரிந்தபடி வனப் பகுதியில் வேகமாக பரவுவதை கண்ட அப்பகுதியினா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத் துறையினா் 3 குழுவாக சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்த காட்டுத் தீ அருகே உள்ள அத்தியூா், பவளக்குட்டை வனப் பகுதிக்கும் பரவியது. தீ வேகமாக பரவுவதால் வனத் துறையினா் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனா்.

தீ விபத்து காரணமாக வன விலங்குகள் பிற பகுதிகளுக்கு இடம் பெயா்ந்து செல்கின்றன. வனப் பகுதி முழுவதும் புகைமூட்டம்போல காணப்படுகிறது. வன ஊழியா்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த இரு தினங்களாக கம்பத்தாரயன் மலையில் காட்டுத் தீ பரவியதால் ஆயிரக்கணக்கான அரிய வகை மரங்கள் எரிந்து சம்பலானதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.