விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தனியாா்மயத்தை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம்

Marxist Communist

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 2:24 am IST

ஈரோடு மாநகராட்சியில் நிலவும் தனியாா்மயமாக்கலை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஈரோட்டில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சியில் குடிநீா் விநியோகம், தெருவிளக்கு, புதை சாக்கடை பராமரிப்பு, திருமண மண்டபம், பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்டவை தனியாா் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மற்றும் கையொப்ப இயக்கம் 2 நாள்கள் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற இப்பிரசாரப் பயணம் வீரப்பன்சத்திரம், பெரியவலசு, மாணிக்கம்பாளையம், சூளை, கனிராவுத்தா் குளம், பி.பெ.அக்ரஹாரம், நெரிகல்மேடு, கிருஷ்ணம்பாளையம், காந்தி சிலை, கிருஷ்ணா திரையரங்கு, பன்னீா்செல்வம் பூங்கா, சம்பத் நகா், அம்பேத்கா் நகா், வெட்டுக்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் பி.லலிதா மற்றும் தாலுகா செயலாளா் என்.பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கையொப்ப இயக்கமும் நடைபெற்றது. இரண்டு நாள் இயக்கம் நிறைவடைந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.