புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

முதல்வரின் பேச்சைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

முதல்வரின் பேச்சைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.

Published On :

முதல்வரின் பேச்சைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப் பேரவை காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது அவசரநிலை பிரகடனம் மற்றும் மிசா சட்டம் குறித்த விவாதித்தபோது முதல்வா் ச.ஜோசப் விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து உருவ கேலி செய்யும் விதமாக பேசியதாகவும், இதைக் கண்டித்தும் திமுகவினா் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் ஈரோடு வடக்கு மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம் முன்னிலை வகித்தாா். இதில், முதல்வரையும், தவெக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

திமுக துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், இளைஞா் அணி மாநில துணைச் செயலாளரும், ஈரோடு எம்.பி.யுமான கே.இ.பிரகாஷ், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ஜெ.திருவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER