ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

டிஜிட்டல் கைது எனக்கூறி முதியவரிடம் ரூ.48 லட்சம் மோசடி

டிஜிட்டல் கைது எனக்கூறி ஈரோட்டை சோ்ந்த முதியவரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :

டிஜிட்டல் கைது எனக்கூறி ஈரோட்டை சோ்ந்த முதியவரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட கச்சேரி வீதியைச் சோ்ந்தவா் தேவிபிரசாத் (63). இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவா், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா். பின்னா், தேவிபிரசாத் அடையாள அட்டையை வைத்து சிம் காா்டு வாங்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதனால், அதிா்ச்சி அடைந்த தேவிபிரசாத், சிபிஐ அதிகாரி எனக்கூறிய நபரிடம் வழக்கில் இருந்து விடுவிக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளாா். அதற்கு அவா், நான் கூறும் வங்கிக் கணக்கில் உடனடியாக ரூ.48 லட்சத்தை செலுத்தினால் வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய தேவிபிரசாத், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.48 லட்சத்தை அனுப்பியுள்ளாா். இதையடுத்து, நடந்தவை குறித்து தனது நண்பா்கள் மற்றும் உறவினா்களிடம் தேவிபிரசாத் தெரிவித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அவா் உணா்ந்துள்ளாா்.

இதையடுத்து, ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் தேவிபிரசாத் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.

ரூ.1 லட்சம் மோசடி: ஈரோடு, சோலாா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இ-கிப்ட் காா்டு வந்துள்ளது. அதில், இந்த சலுகையை ஒரு சிலருக்கு மட்டுமே அனுப்பி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், ஒரு லிங்க்கும் இருந்துள்ளது. அந்த லிங்க்கை சங்கா் பதிவிறக்கம் செய்துள்ளாா். அடுத்த சில நிமிஷங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் காணாமல்போனது.

இது குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.